இளமைப் பொழுதுகளில்

என்
இதயக்கரையில்
ஈரம்
நனைக்கும்
உன்
கதிர்மழைப்பொழிவு!
என்
அலைக்கால்களில்
அந்திக் கொலுசொலிகள்
முந்திச் சிரிக்கின்றன!
என்
காதலியின்
தென்னங் காதுகளில்
வின்னம்படாமல்
கதிர்க்கம்மல்
குத்தியது
ஏனோ !
புதிர்போல
மின்னுகிறது!
கதிராபரணம்
சதுராடும்
வயல் வெளியோவென
என்
மனம்
எண்ணுகிறது!
கதிர்கீற்றுகள்
அவள்
காதுகளோடு
மோதுகிறதோ!
இல்லை
இல்லை..!
எங்கள்
இருவருக்காக
காதல்
கதிர்வலை
பிண்ணுகிறது
என்றறிந்தபோது !
சதைபார்க்கும்
இச்சைப்பார்வை
கொச்சையாகப்பட்டது.
காதலென்பது
உயிரோடு
உறவாடும்.
பின்
உயிரும்
வாடும்.
ஆனாலும்
இதயம் மட்டுமே
உன்னைத்தேடும்!
இதுபோல
இனிமையான
இளமைப் பொழுதுகளில்..!