ஓராயிரம் கதைகள்
கள் வடியும் காம்பில் தேன் ஊறும் மலர்கள்
ஊறிவரும் தேனில் கூடிவரும் வண்டினங்கள்
வாசம் உள்ள மலர்களில் பாசம் உள்ள மனிதன்
நறுமணம் தேடிய மனிதன் மலர்களின் வாசம் கண்டான்
கண்டவன் கொண்டான் நறுமணம் ,
அல்லும் பகலும் அள்ளி வரும்
சுகவாசம் அழகு மலர்கள் தந்து நிற்கும் ,
மனம் நிறைய மணம் பரப்பி
வண்ண வண்ணக் கலவைகளில்
பூத்து பூத்து பூரிக்கும்
பூக்களிலே உள்ள சுகம் பூமிதன்னில் வேறில்லை,
எங்கெங்கும் பூக்கள் வியாபித்துக் கிடக்கின்றன
வசந்தம் தேடும் மலர்களின் சுவாசம் வாசமே
நமது நேசம் அதன் வாசமும் அழகுமே
மலர் என்ற வார்த்தையிலே வாசம் உண்டு
அந்த வாசத்திலே நமது வாழ்வில் சொர்க்கமும் உண்டு
,
இன்பத்தின் நடுவிலே ஈடில்லா சுகம்
மலர்களின் நறுமணமே
நல்ல குணம் நறுமணமாம் நானிலமும்
கொண்டிருக்கும் வண்ண வண்ண தோற்றங்களில்
நாம் போற்ற நாம் வாழ்த்த நாம் சூடக் கொடுத்தது
இந்த அழகு மலர்க் கூட்டங்களே,
மலர்களுக்கும் மனிதனுக்கும் படைப்பில் ஒரு தொடர்பு உண்டு
பாசத்திலும் வாசத்திலும் பங்கு உண்டு
ஒரு முழம் பூக்கள் சொல்லும் ஓராயிரம் கதைகள்
ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்திருக்கும்
மர்மம் என்ன கூறி நிற்கும் மயக்கும் இந்த மலர்கள்

