என்ன ஒரு கோபம்
கண்ணில் கண்டதும் கண்ணோடு வந்தவளை
கண்ட நொடிமுதல் கருத்தில் நின்றவளை
பண்பட்ட நெஞ்சத்தில் விழிகளால் போர்தொடுத்து
புண்படுத்தி வாகைசூடி சிறைகொண்டு போனவளை
பெண்ணென்று பாரோர் புரியாமல் பேசுகிறார்
கண்கொண்டு பாரும் கனவென்றேன் நான் !!
இதயம் பூத்து இரவின் மடியில்
உதிக்கும் நிலவில் வர்ணஜாலம் சேர்த்து
பதியும் நினைவுகள் மறந்து போக
புதிதாய் உணர்ந்தேன் என்னை நானே!!
என்ன மாயம் செய்தாளோ என்னை;
உண்ண மறந்து உறக்கமும் மறந்து
இன்னும் பலபல செய்கையும் மறந்து
நின்ற மரமாய் நானும் நின்றேன்
என்னவள் கடைவிழிப் பார்வை மோத!!!
சங்கமித்த கண்களை சடுதியில் பிரித்து
அங்குமிங்கும் பார்த்தபடி அடிமேல் அடிவைத்து
அன்னம் நடந்தாள் என்மீது விழிவைத்து
கீழோர் மறப்பர் என்னும் வழக்கொன்று
பழங்கால பாடலில் பலதரம் கேட்டதுண்டு
வாங்கித்தந்த கால்கொலுசு நில்லாது சென்றிருக்க ;
ஏங்கிநின்ற என்னை தழுவிச்சென்றன கண்கள்!!
உரிமையுள்ள கால்கொலுசின் கோபத்தை நானறிந்தேன்
பிரியத்தில் அவள்கால் கொலுசாக வேண்டுமென்று
ஒருமுறை நானும் சொன்னதுதான் காரணமாம் !!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
