எல்லாம் வாங்கியாச்சு

ரெண்டு காகிதத் துண்டுகள்
போதும்..
கப்பல் ஒன்று ..
கத்திக் கப்பல் ஒன்று..
அல்லது ..
சிலுவை போல் ஆக்கி
..கோர்த்து..
சின்னக் குச்சியில் பிடித்தபடி
காற்றாடி ...தயார்..
சைக்கிள் டயர்..சக்கரம் ..
ஏதோ ஒன்றை உருட்டி
குச்சியால் தட்டியபடி
நாலு தெரு சுற்றி வரலாம்..
திருவிழாவில் வாங்கிய
மிட்டாய் கடிகாரம்..
பொம்மை டெலிபோன் ..
பிலிம் போட்டு
கண்ணில் வைத்து
சினிமா பார்க்க ஒரு
டப்பா..
ஏழெட்டு வயதில்..!
எல்லாமே நிஜமாக
வாங்கினாலும்...
அன்றைக்கு தொலைத்த
குதூகலத்தை ..
வாங்கவே முடியவில்லை..
எப்போதும்..!

எழுதியவர் : கருணா (13-Jul-15, 7:40 pm)
Tanglish : ellam vaangiyaachu
பார்வை : 179

மேலே