என்னத்த தலைப்பு வச்சி என்னத்த செய்ய
ஒவ்வொரு
ஆண்டும் நடக்கும்
கலைவார விழாவில்
யோகாவில் அவனே
முதல் பரிசு வாங்கினான்...
காவடி ஆட்டத்தில்
அவனுக்கே முதல் பரிசு
கிடைத்தது...
சமையல் போட்டில்
அவனது நெய் பொங்கலை
அடித்துக்கொள்ள ஆளே இல்லை..
கரும்பலகையில்
தீபாவளி வாழ்த்துக்கள்
எழுதிப்போட்ட முதல் ஆள்
அவனே தான்..
அவன்
ஆயூப்பாகவோ
நவாஸாகவோ
சஃபீக்காகவோ
இருந்துவிட்டுப் போகட்டும்.
நாங்கள்
சீனிவாசனாகவோ
இராமச்சாரியாகவோ
சிவலிங்கமாகவோ
இருந்துவிட்டுப்போகிறோம்..
நாங்கள் சேர்ந்து சுற்றிய
சவேரியார் பள்ளியில்
எங்களுடன் சேர்ந்து ஒரு
செல்ஃபி எடுத்துக்கொள்ள
நீங்கள் தயாரா??
--கனா காண்பவன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
