எங்கேயும் எப்போதும்

நூற்றி எட்டிற்கு அழைத்தபின்
பெரியவர்கள் சிலரையும்
குழந்தைகள் சிலரையும்
உயிரற்றவர்களாகவோ
உயிருள்ளவர்களாகவோ
அவர்களின்
துண்டுண்ட உறுப்புகளுடன்
ஏற்றிச்சென்றாகிவிட்டது

கண்ணாடிக்கற்கண்டுகளுக்கும்
இரத்தத்திட்டுகளுக்குமிடையே
வழக்கமாகவே சென்றன வாகனங்கள்
தேசிய நெடுஞ்சாலையில்

மதுபோதையில் இருந்த
ஓட்டுநர்
பராமரிக்கப்படாதப்
பேருந்து
கவனிக்கப்படாத
சைகை விளக்கு
தனியார் ஒப்பந்ததாரர்
ஏப்பம் விட்ட சாலை

இப்படி எந்தக் காரணமும்
இருக்கலாம் மேற்கண்ட
துயரத்திற்கு

நமக்கானப் பெருந்துயரம்.......
போக்குவரத்து இடையூறு
மூன்று மணி நேரங்கள்
என்பதுதான்.......!!!!!


*************************************************
குறிப்பு:
சைகை விளக்கு - Traffic SIgnal

எழுதியவர் : தர்மராஜ் (13-Jul-15, 9:16 pm)
Tanglish : yenkeyum eppothum
பார்வை : 1236

மேலே