ஓய்வுறுதல்

தாயத்தில் தொடங்குகிறது
பரமபத வாழ்வு.
சில நேரம் ஏணிகள்
சில நேரம் பாம்புகள்
சில நேரம் சலனங்கள் அற்று.
அடைந்தபின்
மறுபடியும் தாயம் ஒன்று.
விடியலுக்குப் பின்
ஒய்வு பெருகின்றன
தாயக் கட்டைகளும்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (13-Jul-15, 9:34 pm)
பார்வை : 164

மேலே