காணி நிலம் வேண்டும் பராசக்தி

பங்காளி சண்டையிட்டு
அறுபது சென்ட்டு
நிலத்தை விற்று
அபார்ட்மெண்டில்
வீடு வாங்கி
பெண்டாட்டி பிள்ளையோட
ஓட்டலில்
கம்பு தோசை ஒன்று
அறுபது ரூபாய்க்கு வாங்கிய போது..
..
தோசையில் தெரிந்தது
அண்ணனின் முகம்..
யாருக்கும் தெரியாது ..
தோசை உப்புக் கரித்த காரணம்..!