கவிதையும் கடைசி வரியும்

கவிதையும் கடைசி வரியும்

முதல் வரி...
இரண்டாம் வரி...
மூன்றாம் வரி...
நான்காம் வரி...
அதற்குள்
அடுத்த கவிதைக்கு
சென்று விட்டீர்களா?

என் கவிதையின் கரு
கடைசி வரியில்தானே
இருக்கும்

அதற்குள்
கடைசி வரிக்கு
சென்று விட்டீர்களா?

நடுவில் உள்ள
வரிகளில்தானே
உருவமும் அதன் அழகும்
இருக்கும்

நடுவிலும் படித்தாயிற்றா?
அவ்வளவுதான்
ஏனெனில் ஏற்கனவே
முதல் நான்கு வரிகளை
படித்து விட்டீர்கள்

கவிதை மட்டுமல்ல
முழுமை பெறாத எதுவும்
வாழவில் நிறைவை தராது

கற்றல் முதல் காவியம் படைத்தல் வரை
காதல் முதல் கல்யாணம் வரை
தொழுதல் முதல் தொழில் வரை
இல்லறம் முதல் துறவறம் வரை
பிறப்பு முதல் இறப்பு வரை

இன்னொரு முறை
வாசித்துப் பாருங்கள்
என் கவிதையில்
உங்களது எண்ணமும்
ஒளிந்திருக்ககூடும்

உங்கள் வாசிப்பில்
நானும் கலந்திருப்பேன்

எழுதியவர் : சூரியகாந்தி (14-Jul-15, 12:53 am)
பார்வை : 103

மேலே