அவளிடம்
நிலவு தோற்றது
அவள் முகத்திடம்
விண்மீன் தோற்றது
அவள் விழியிடம்
மலர் தோற்றது
அவள் கூந்தலிடம்
பொன்னகைகள் தோற்றது
அவள் திருமேனியிடம்
இசை தோற்றது
அவள் பாதக்கொலுசிடம்
சங்க இலக்கியம் தோற்றது
அவள் பேச்சிடம்
நானும் தோற்றேன்
அவள் மனதிடம் ....!