மெல்லிசை மன்னனுக்கு
நாசிகளால் சுவாசிப்பவர்களுக்கு மத்தியில்
ஹார்மோனியத்தால் சுவாசித்தவர்
மானுடதிற்காய் இசையமைத்த மேதையின்
இனி அடுத்த பயணம்
வானவர்க்காய் இசையமைக்க
மெல்லிசை மன்னன் எனும்
இன்னிசை தேவனின் ராகத்தினை
கடவுளும் கேட்க விரும்பினார் போலும்
அதான்
அழைப்பு விடுத்தான்
என் அண்ணலை
வர வேண்டி
சங்கீதம் என்னும் ராகத்தினை
வரமாய் பெற வேண்டி
ஆயிரம் பாடல்கள் மேல்
அருளிய இசை தெய்வம்
இன்னொரு தெய்வத்திற்கு
வரமளிக்க
வானுலகம் செல்லும்
புனித நாள் இந்த நாள்
அய்யனே தமக்கு
கண்ணீர் அஞ்சலி செலுத்த
கனக்கிறது மனது
கனத்தமனதோடு
கவியஞ்சலி செலுத்துகிறேன்
ஏற்றுகொள் என் அய்யனே