அர்ப்பணம் - யாகம்
அர்ப்பணம் - யாகம்
=================
ஒரு புல்லாங்குழல் ஓடையிலமிழ
துளைகளின் வழியே நீர் நிரம்பிவழிகிறது
எங்கிருந்தோ
பறந்துவந்த வெண்புறா
அதன் கால்களால் இறுகப் பிடிக்க
அர்த்ததிசையில் அந்த வான் நீந்தல் ம்ம்ம்
எதுவும் கேளாது
கூந்தலும் முகமும் அலையாடச்சேர்ந்த
அவ்விரு கைகளின் கூப்பின்மேல்
சிவந்த நிலவேந்திய
தேவதையின் உத்பதன சிரிப்பொலிகள்
உதானம் நெரிக்கின்றன
அதில் சப்தங்கள் அடைப்பட்டும்
ம(ன)ரண ஜுவாலையின்
கரும்புகை மூட்டத்திற்கிடையில்
தொடர் ஆகுதி செய்கிறேன்
விடியலின் சூரிய மஞ்சள்
என் கிடக்கறை சுவரின்
இருள் சூழ்ந்த நிர்வாணங்களை
திரை அவிழ்த்துக் கொண்டிருந்தது
ஆம்,,,சுற்றிலும் அந்த முகமே
அனுசரன்