பிடித்த சிந்தனைகள்

வார்த்தை என்றாலே சப்தம்
பூ என்பதோ மௌனம்
மௌனத்தை சப்தம் எப்படி
வர்ணிக்க முடியும் ?
*********************************************
வாழ்க்கை என்கிற இந்த ஆட்டத்தில் ஒரேஒரு
வாய்ப்பே நமக்கிருக்கிறது -
எதிர்காலத் தலைமுறைகளைப் பந்தயமாக
வைத்தே நாம் இந்த ஆட்டத்தை ஆடுகிறோம் !
**************************************************
வழிநெடுக கனத்துக்கொண்டு வருகிறது
வயதான பாட்டியிடம்
வாங்காமல் வந்த மல்லிகைப்பூ ...!
***************************************************
"தவறுகள் நம்மிடம் இருக்கும்போது
காலத்தையோ கடவுளையோ
காரணஞ்சொல்லிப் பயனில்லை ...!"
*********************************************************************
பிரபஞ்சம் ஒரு கவிதை
வாழ்க்கை என்பது
அதைப் புரிந்து கொள்ளச்
செய்யும் முயற்சி ..!