நீ நீயாக இல்லை என்னிடம்

அழகிகள் உலா வரும் சாலை!
விழி இரண்டில் மலர் பாறை மோதி விபத்தொன்றில்
விழுந்து விட்டேன்.

சட்டை பையில் காற்று மட்டும் சல சலக்க.
வலியின்றி,மருந்தின்றி உன் மெல்லிய சிரிப்பில்
உயிர் பிழைத்து விட்டேன்.

நீ வாசித்த மௌனத்தை சொற்பொழிவாய் ஏற்க.
நீ நேசித்த பூங்காவை கலைகூடமாய் பாவிக்க.

வாய்க்குள் அகப்பட்ட மெல்லும் கோந்துபோல்,விடியும் வரை
உன் உறக்கத்தில் அகப்பட்டு விட்டேன் கனவு பொருளாய்.

எதார்த்த பேச்சுக்கே வாய் தடுமாறும் என்னையும்
மாற்றினாய் எப்படி தெரியுமா , கேள்..

ஆலமரம் ஆக்கி போட்ட விழுது,
கற்பனை தேர் இழுக்கும் கயிறு,
இவ்விரண்டும் உன் பின்னலிட்ட கூந்தலை படம்பிடிக்கிறது.

வெய்யிலில் கருத்துபோன வானவில்,
புராணத்து ராமன் வளைத்த சுயம்வர வில்,
இவ்விரண்டும் உன் புருவத்தை கடன் கேட்டு அடம்பிடிக்கிறது.

சமாதான புறாவின் நிறம்,
வெட்டுகிளியின் ரத்தம்,
இவ்விரண்டும் உன் பற்களின் கருணையை புகழ்கிறது.

முகம் சகிக்கா முன்கோபத்தின் உச்ச கட்டம்,
வயதாகி கொடியுதிர்ந்த கோவ்வைக்கனி,
இவ்விரண்டின் சபலம் உன் உதடுகளை கேலி பேசுகிறது.

செய்கையிலே மின்னஞ்சல்,
ஜாடையிலே குறுந்தகவல்.
அசைவுகள் ஒவ்வொன்றும் கடவுசொற்கள்..
போதுமடி,இன்னும் சொல்லிக்கொண்டே போனால்
நான் முழுக்கவிஞன் ஆகிவிடுவேன்.

கொஞ்சம் காதல் வேண்டி
கொஞ்சமும் கூச்சமின்றி தமிழ்ழிடம் மண்டியிடுகிறேன்
உன் பெயர் உச்சரிப்பு தமிழில் தொடங்குவதால்.

கற்பனை

நேசமுடன்

ஜெயப்பிரகாஷ்கண்ணன்
காஞ்சிபுரம்

எழுதியவர் : (15-Jul-15, 6:56 pm)
பார்வை : 111

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே