இது தேர்தல் காலம்
![](https://eluthu.com/images/loading.gif)
இது தேர்தல் காலம்!!!!
..........................................
அந்தி சாயும் வேளை
சந்தி கூடி வந்து
குந்திருந்து பலரும்
மணலை ஏடாய் ஆக்கி
தன் மனதில் கொண்ட அவரை
முந்திச் செல்ல கணிப்பர்
அவர்தான் வெற்றி என்பார்!
வந்திருந்து பலரும்
மனதில் வெந்து அவரை
சினந்து ஏசிப் பேசி
மாற்றுக் கணக்குப் போட்டு
தன் மனங்கொண்ட தலைவன்
வென்றான் உயர்ந்தான் என்பான்
அவன் போட்ட கணக்கில்
விவாதம் செய்யும் இவர்க்கு
இவர் சொந்த பந்தம் இல்லை
வெட்டிப் பேச்சுப் பேசி
சந்தி சிரிக்கப் பேசி
சந்தி சந்தமாகி
பாவம் பிரிந்து செல்வர்
மனமும் கோணலாகி!