அன்பே இது உனக்காக
ஒற்றை வண்ணம் கொண்ட
மயில்தோகை அன்றோ
உன் கருங்கூந்தல்.!
காதல்பந்தி பரிமாறும்
வாழைஇலை அன்றோ
உன் நெற்றி.!
சிறகடிக்கும் பறவையின்
இறக்கைகள் அன்றோ
உன் இருபுருவங்கள்.!
அதை நீ அசைத்து அசைத்து
பேசுகையிலே வானில்
பறக்கும் அன்றோ
நம் காதல் பறவை.!
உன் நாசி துவாரங்கள்
நாதஸ்வர துவாரங்கள்
அன்றோ.!
உன் மூச்சுக்காற்று
உள்சென்று திரும்பகையில்
ஸ்வரங்களாய் ஒலிக்கின்றதே.!
என் காதல்அம்பு நுழைந்து
செல்லும் காதல் நுழைவு
வாயில் அன்றோ
உன் இருவிழிகள்.!
அதை திறந்து மூடும்
காதல்கதவுகள் அன்றோ
உன் இமைகள்.!
உன் பார்வை அன்றோ
நம் விழிகளின் காதல்பாலம்.!
உன் காந்தவிழி
அசைவல்லவா.!
புவியின் வட,தென்
துருவங்களையும்
தீர்மானிக்கும் அன்றோ.!!
உன் புன்னகை முத்தை
காக்கும் சிப்பி அன்றோ
உன் இதழ்கள்.!
என் மௌனத்தையும்
ஒட்டுகேட்டு அதை
காதல் மொழியாய்
உன் மனதிற்கு சொல்லும்
ஒற்றன் அன்றோ
உன் செவிகள்.!
நம் குழந்தை பசி போக்கும்
பால் நிலவன்றோ
உன் மார்பகங்கள்.!
நுண்ணோக்கியிலும்
காண இயலாத
நுண் இடை அன்றோ
உன் இடை.!
உன் இடைக்கும் ஒட்டியாணம்
செய்ய துடிக்கும் கலைஞன்
அல்லவோ நான்.!
உன் இடையை சுற்றி
வரும்போதே பிறவிப்பயனை
அடையும் அன்றோ
நீ உடுத்தும் சேலையும்.!
உன் ரகசிய மச்சங்கள்
ஒவ்வொன்றும் கண்கள்
அறியா புது கருப்பு கிரகங்கள்.!
அதை நான் ஆராய என்று
உன் கணவனாவேனோ.?
தாஜ்மஹாலை தாங்கி
நிற்கும் தூண்கள் அன்றோ
உன் பளிங்கு கால்கள்.!
பிறக்கா சிசுவின் பாதத்தோடு
பனிப்போர் புரியும்
மென்மையன்றோ
உன் பாதங்கள்.!
உயிரற்ற கொலுசையும்
பாட வைக்கும் கலைதானோ
உன் நடை.!!
ஆபரணங்கள் எல்லாம்
உன்மேனி நாடுவது
தங்கள் அழகை
மெருகேற்றிடவே.!
ஒருமுறை நீ
தமிழ் உரையாற்றினால்.!
தமிழ் அல்லவோ பின்
உலக மொழி.!!
கானப்போட்டியில் நீ
கலந்து கொண்டால்
கருங்குயில்களும்
மேடை ஏற தயங்குமன்றோ.!
உனக்காக உன் வாசலில்
உன் காலணியும்
தவம் கிடக்கும் அன்றோ.!
உன் மலர்பாதம் தாங்க...