====கண்ணாடி=========

====கண்ணாடி=========

தலைவாரி முடித்தாயிற்று
முகப்பூச்சும் பூசியாயிற்று
நெய்த மல்லிகையும்
கூந்தல் போர்த்தியாயிற்று
வைகறை நிறமார்ந்த
நுதற்கரையின் மிசையில்
வெட்கப்பிறை அவிர்ந்தாயிற்று
பூ இதழ்ப்புணர்ந்த பனித்துளிபோல்
மூக்கில் முளைத்த
முகப்பருவை கிள்ளியாயிற்று
ஆனாலும் அழகில்லையாம்
அருகிலே அவனில்லையாம் ம்ம்ம்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (16-Jul-15, 12:34 am)
பார்வை : 107

மேலே