எய்ட்ஸ் சிகிச்சை
ஹெச்ஐவி குணப்படுத்தக்கூடிய மருந்து ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஒரு படி மேலே சென்றுள்ளனர் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு ஆராய்ச்சியாளர்கள் குழு, கத்திரி போன்ற இயந்திரத்தை பயன்படுத்தி பாக்டீரியா மூலம் ஹெச்ஐவி வைரஸ் கண்டுபிடித்து நீக்கும் ஒரு பாதுகாப்பு முறை அமைப்பை வடிவமைக்கின்றனர். இந்த சோதனையில் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட செல்களை முழுமையாக 72% வரை நீக்கக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.
இயற்கையான நோய்க்கிருமிகளுக்கு எதிராக உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் மிகவும் அதிசயத்தக்க சில வழிமுறைகள், பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது என்று கலிபோர்னியாவில் உள்ள சால்க்கின் ஜீன் எக்ஸ்பிரெஷன் ஆய்வுக்கூடத்தின் பேராசிரியரான ஜுவான் கார்லோஸ் இஸ்பிசாவ் பெல்மொண்டே கூறியள்ளார். வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக பாதுகாத்துக்கொள்ளும் பாக்டீரியா மூலம் நோய் எதிர்ப்பு பற்றி புரிந்துகொண்டு, மனித நோயாளிகளின் எச்ஐவி போன்ற பேரழிவு தரக்கூடிய வைரஸ்கள் மீது இலக்கு வைத்துள்ளது. ஹெச்ஐவி வைரஸ் மனித உயிரணுவிற்குள் ஒளிந்து அதிகமாகும் போது பேரழிவை ஏற்படுத்தும்.
இதனால் செல்களின் செயல்பாடுகள் முற்றிலும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வைரசின் மரபணு மூலக்கூறுகள் அதிகப்படுத்தும், பின்பு செல்களின் சொந்த மரபணுக்குள் புதைந்துகொள்ளும். இவ்வாறு பாதிக்கப்பட்ட செல்கள் அனைத்தும் ஹெச்ஐவி தொழிற்சாலை போல் பெறுக்கெடுத்து, வைரஸ்களை இன்னும் அதிகப்படுத்தி மனித உடல் முழுவதும் பரப்பிவிடுகிறது. ஏற்கனவே உள்ள ஹெச்ஐவி மருந்துகள், தனிப்பட்ட நடவடிக்கைகளை மட்டும் இலக்கு வைத்துள்ளது. உதாரணமாக அவற்றில் சில, செல்களின் டிஎன்ஏக்குள் ஒருங்கிணைப்பதிலிருந்து வைரஸை தடுத்து நிறுத்துகிறது, மற்றொன்று வைரஸை மேலும் அதிகப்படுத்தும் பாதிக்கப்பட்ட செல்களை தடுத்து நிறுத்துகிறது.
இவ்வாறு வைரஸ் அதிகப்படுத்துவதை தடுத்து நிறுத்துவது சில ஆண்டுகளுக்கு மட்டுமே செயலற்றதாக இருக்கும், பின்னர் மீண்டும் செயல்படுத்த தொடங்கிவிடும். இதனால் நோயாளிகள் வாழும் காலம் வரை, ஒவ்வொறு நாளும் அல்லது ஒவ்வொறு வாரமும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஹெச்ஐவி என்பது மறைந்திருக்கும் ஒன்று என்று பேராசிரியர் லிவீணீஷீ கூறுயுள்ளார். இவ்வாறு செய்வதில் பணம், நேரம் மற்றும் முயற்சி ஆகியவை செலவாகிறது.
இந்த பிரச்சனையை சரி செய்யும் நோக்கத்துடன், விஞ்ஞானிகள் சிஸிமிஷிறிஸி என்று அழைக்கப்படும் மூலக்கூறு பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி பாக்டீரியா மூலம் வெளிப்புற டிஎன்ஏ உள்ள குறிப்பிட்ட பகுதியை வெட்டி எடுக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். இது சமீபத்திய கண்டுபிடிப்பு என்பதால், விஞ்ஞானிகள் சிஸிமிஷிறிஸி பயன்படுத்தி மரபணுக்களை எடிட் செய்யவும் தொடங்கியுள்ளனர்.
சிஸிமிஷிறிஸி மரபணு மூலப்பொருட்களின் பிட்கள் என்று அழைக்கப்படும் கைடு ஆர்என்ஏகளை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட இடங்களை வெட்ட வேண்டும் என்று ஆணையிடும். அதனால் விஞ்ஞானிகள் கைடு ஆர்என்ஏகளை உருவாக்கி ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட செல்களின் குறிப்பிட்ட பகுதியை கண்டறியும் என்று கூறியுள்ளனர். ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு செல்களின் பணி அமைப்புக்கு சிஸிமிஷிறிஸி வில் கைடு ஆர்என்ஏ மற்றும் மற்ற மூலக்கூறுகள் தேவைப்படுகிறது. இதனால், ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட மரபணுக்களின் சரியான இடங்களை வெட்டி, வைரஸை செயலிழக்கச் செய்கிறது. இந்த சோதனையின் முடிவில் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட வைரஸ்களை முழுமையாக 72% வரை நீக்க முடிகிறது என்று தெரியவந்துள்ளது.
## நன்றி தினகரன்