இடையூறு கிழவி

பலபல
சிலசில
கலகல
விழவிழ
உழஉழ
என்று பேசினால்
இரட்டைகிழவி என்ற பெயர் உண்டு .

இலக்கியம் மாறாமல்
தளர்ந்த நடையில்
நாக்கு தள்ளாடி
அவ்வாறே
டே டே ...
சாமி சாமி...
யப்பா யப்பா ...
தம்பி தம்பி ..
ஐயா ஐயா ...
என்று கூவி
சோறு கேட்கும்
வயது முதிர்ந்த கிழவிக்கு
இடையூறு கிழவி என்ற பெயரே உண்டு .

அன்று ...
இரட்டைகிழவியை தமிழ் இலக்கியத்தில் சேர்த்துவிட்டோம் ...
இன்று ...
இடையூறு கிழவியை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டோம் ...

என்னே!!!!! அறிவு நமக்கு ....

எழுதியவர் : சேர்த்தவரே (17-Jul-15, 3:56 pm)
பார்வை : 78

மேலே