எரிதழல் வீழின் -4 கார்த்திகா

"நீ ஏதாவது அதிசயம் நிகழட்டும் என்று காத்திருக்கிறாயா?
உன்னை மாற்றப் போகும் ஏதோ ஒன்றிற்காக ஏன் நேரத்தை வீணடிக்கிறாய்?
நீயே ஓர் அதிசயமாய் மாறினால் என்ன!!"

பிறவியிலேயே கைகளையும் கால்களையும் இழந்த இளைஞர் ஒருவரின் தன்னம்பிக்கை பேச்சு இது....

எனக்கு இது நன்றாக வருகிறது..மற்றவர்களைப் போல வேறு ஏதேனும் வரவில்லையே......ஆனால் எனக்கு பிடித்ததை செய்தால் அடுத்தவர் சிரிப்பார்களே....

உனக்கு யார் சொன்னது
உனக்குப் பிடித்ததை செய்வதற்கு
யாரோ ஒருவரின் சம்மதம் வேண்டும் என்று

சரியோ தவறோ
நமக்கு மட்டுமே ..
வெற்றி தோல்விகள் மட்டும்
உன்னை நிர்ணயிக்கும் என்றால்
இரண்டிற்கும் இடைபட்டதை எதுவென்கிறாய் நீ//

பாராட்டுகளும் விமர்சனங்களும்
முடிந்தவுடன் மறந்துவிடும் பிறர் மனதில்
நீ மரிக்காமல் வாழ்வாய் என்று என்ன நிச்சயம்

எதுவும் கொண்டு செல்லப் போவதில்லை
உயிரைக் கூட.....

மரத்தை அசைக்கிறது காற்று
என்று தடை செய்திருந்தால்

வேரை அரித்துவிடும்
மண்ணின் புழுக்கள் என்றிருந்தால்

பூமியை புற்களின் விதைகள்
துளைக்கிறது என்றால்

பூக்கள் மரிக்க வேண்டாமென்றால்

எரிகுழம்புகளும் பாறைகளும்
தீயாய் கனக்கிறதென்றால்

நீரினை அனுமதித்தால்
ஈரமாகி விடுவோம் என்றோ

புவி நினைத்திருந்தால்
வெறும் கற்களாலும் தூசிகளாலும்
அடைபட்டு உயர் அழுத்தத்தினால்

என்றோ இந்த வளிமண்டலத்தில்
வெடித்துச் சிதறி இருக்கும்!

உன்னை பற்றிய நற்செய்திகளை நீ
வரவேற்கிறாய் என்றால்
விமர்சனங்களுக்காக உன் காதுகளை
திறந்து வை ..கண்கள் படிக்கட்டுமே//

எப்பொழுது ஆசைகளுக்கும் கனவுகளுக்கும் தடுப்பு செய்கிறாயோ அன்றே உன் லட்சியத்தில் பாதி
அழிந்து மரித்துவிடும்....

உன் கனவுகளில் ஒன்றை
சரியாய் வராது என்று ஒதுக்கினால்
நீ ஓரம் கொள்
லட்சியத் தீட்டல்களில்
உனக்கு பங்கில்லை

சொந்தமில்லாக் கனவுகளைக்
கொண்டாட உனக்குத் தகுதியுண்டோ?


"விழித்திரு
விழித்திறந்திருந்தும் கனவு கொள்
நிஜங்களும் நிழல்களும்
ஒன்றாகிப் போகும் கணத்தில்
நீ அதிசயமாவாய்!!"


-மீண்டும் எரியும்

எழுதியவர் : கார்த்திகா AK (17-Jul-15, 4:02 pm)
பார்வை : 344

சிறந்த கட்டுரைகள்

மேலே