இப்படியும் சில ஆசைகள்

                    இப்படியும் சில ஆசைகள்

பரணில் கவிதைகள்..... படிக்காத புத்தகங்கள்

மோர் குழம்பு...  போண்டா

கருவாட்டு குழம்பு...பழைய சாதம்

துண்டிலில் பொரி.....குளத்து மீன்கள்
 
கோவில் சுண்டல்...... தொன்னை

கல்லூரி விடுமுறை... முகநூல் நுழைவு 

எழுதாத நோட்டு....கிறுக்காத மழலை

படிக்காத புத்தகம்... எழுதாத கவிதைகள் 

கோடையில்குடை.....நனையாத தலைகள்

சாதனை  தேடும் வரிகள்....வெற்றி பெறாத தோல்விகள் 

அழியாத நினைவு ... கோலமிடும் விரல்கள்

நனைக்கும் கண்ணீர்....நனையாத கர்சீப 

நீங்காத நினைவு....கண்ணதாசன் பாடல்கள் 

அமைதியான தூக்கம்....அம்மாவின் சேலை

உலகத்து  ஆசான்....இரவுப் பாடகன்

இப்படி பட்டவைகள் தேடும்போது கிடைக்காத பொக்கிஷங்கள் 
வேறு எதுவுமில்லை..

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (17-Jul-15, 6:09 pm)
பார்வை : 361

மேலே