உறவு ஒன்று உயில் எழுதுகிறது - 22
சோகத்தை யாரும்
சொந்தமென்று சொல்லிக் கொள்வதில்லை
உன்னை நேசித்த என்னைத் தவிர,
இருக்கின்றேன்
அனைவருக்கும் மத்தியிலும் "அனாதையாய்",
நடமாடுகிறேன்
நாலுபேருக்கு மத்தியிலும் "நடைப் பிணமாய் ",
பேசுகின்றேன்
எனக்குப் பிடித்தவளுக்கு மத்தியில்
"என்னை பிடித்தவர்களோடு".
உன்னைக் காணும் பொழுதெல்லாம்
கண்ணீரை மறைக்க கஷ்டப்படுவது
என் கண்களுக்கு தண்டனை.
நிஜத்தைத் தொலைத்து விட்டு
நித்திரையில் தேடுவது
என் கனவுகளுக்கு தண்டனை.
வாழும் வரை வருத்தங்களையே
சொல் விருத்தந்களாய் வைத்திருப்பது
என் கவிதைக்குத் தண்டனை.
உன்னோடு பேசாத பொழுதுகளில்
என்னோடு பேசி எரிச்சலை தாங்கிக்கொள்ளும்
என் நண்பர்களுக்குத் தண்டனை.
என் கண்ணீரும் ஒரு நாள் காய்ந்து போகும்
அட..
கண்ணில் உன் உருவம் கரைந்து போகும்
ஆனால்...
கனவில் வரும் உன் உருவம் மட்டும்.....

