காதலும் காமமும் வேறில்லை- யார் சொன்னது

விழிகள் பேசினால் காதல்
விரல்கள் பேசினால் காமம்

மனதை மட்டும் தேடினால் காதல்
உடலை மட்டும் தீண்டினால் காமம்

பிறந்த குழந்தை போல் பார்ப்பது காதல்
பிறந்த மேனியாய் பார்க்க துடிப்பது காமம்

அவள் ஒருத்தியின்றி வாழ்வில்லை என்பது காதல்
காணும் பெண்ணிடம் எல்லாம் தேடுவது காமம்

உடல் நலமில்லை எனில் துடிப்பது காதல்
அது சரியாகும் வரை கண்டுகொள்ளாது காமம்

முதுமையிலும் தொடர்வது காதல்
தோள் சுருங்கியதும் அடங்குவது காமம்

மனதின் அழகை பார்த்து வருவது காதல்
உடல் கவர்ச்சி கண்டு அலைவது காமம்

சொத்து எழுதி வைத்தாலும் வருவதில்லை காதல்
காசு பணம் இருந்துவிட்டால் கிடைத்துவிடும் காமம்

அனைத்திற்கும் உச்சமாய்,

நொடி பொழுதில் அடங்கி விடும் உடலின் சுகம் காமம்
வாழ்வனைத்தும் தொடர்ந்துவரும் மனதின் சுகம் காதல்....!!!

எழுதியவர் : தண்டபாணி @ கவிபாலன் (17-Jul-15, 7:02 pm)
சேர்த்தது : L.S.Dhandapani
பார்வை : 124

மேலே