என்னவளே

மேலிருந்து சொன்னால்
மேனகையின் மேனியிது...

இருட்டைக் கத்தரித்து
இடை தாண்டி
பரவிய கூந்தல் ...

கூந்தலில் ,
நட்சத்திரங்களின் நகலாய்
நந்தவன பூக்கள் ....
$

கண்களுக்குள் கறுப்புச் சூரியன்
கரையேறத் துடித்திருக்கும் ...
கரையோரத்தில்
கருநாகங்கள் படுத்திருக்கும் ...

ஒற்றைக் குருவி துரத்தும்
கற்றைக் காகங்கள்
அவள் பார்வை ...
$

மஞ்சள் வெயிலெடுத்து
மாதுளை பழமெடுத்து
தளிரோடு -தாமரை அரைத்த
தங்க கண்ணங்கள் .....
$

கள் வடிக்கும்
கனகாம்பரம் பூவானது -அவள்
கனிந்த இதழானது ...
$

இல்லாத கடவுளைப் போல்
இருக்கின்ற இடுப்பு ,,,

தள்ளாமல் தழுவுகின்ற
தளராத மார்புகள் ....

எங்கு தேடினாலும்
கிடைக்காத இடையும் ,
எடுத்த எடுப்பிலேயே
கிடைக்கின்ற கனியும்
என் கைகளுக்கு புதிரே ...
$

மொட்டை விட்டு
எட்டிப் பார்க்கும்
பூவானது -அவள்
பூப்படைந்த உறுப்பானது ...
$

நீ
பட்டுப் பாவாடை
அணிந்து வந்தால்
பட்டாம் பூச்சிகள் வெட்கும் ...

எழுதியவர் : தினேஷ் sparrow (17-Jul-15, 8:02 pm)
Tanglish : ennavale
பார்வை : 533

மேலே