லேக் ஏரியா

அதென்ன அன்பே . .
அங்கே மட்டும் . .

பட்டி தொட்டி போல்
அப்படி ஒரு
பாசப் பசுமை.

குட்டி ஊட்டியாய்
புட்டி தேடச் செய்யும்
குளிர்ச்சி.

சொட்டு நீலம் 'பெற்ற'
தொட்டில் வேஷ்டியின்
தூய்மை.

எனக்குத் தெரிந்த வரையில் . .
நீ வசிக்கும்
அந்தப் பகுதி மட்டுமே . .
'சிங்காரச் சென்னை'

எழுதியவர் : JAYAKRISHNAN (17-Jul-15, 8:17 pm)
சேர்த்தது : JK BLR
Tanglish : laig yeriyaa
பார்வை : 116

மேலே