இன்றைய இளையனும் எந்திர கன்னியும்
கணினி ஒரு கன்னியாகி
கனவில் வரும் நிலவோ ...
இணைய தளங்கள் அத்தனையும்
இனியவளின் இடையோ ...
பென்டிரைவில் செய்து வைத்த
பென்சில் அது விரலோ ...
வலைதளத்தில் வந்தாலும்
வலையில் விழா மானோ ...
மென்பொருளில் செய்த
மெல்லியதொரு மேனியோ ...
கல்லில் செய்தாற்ப் போல்
ஹார்டிஸ்க்கானது மனமோ ....
ப்ரோக்ராம் கொண்டு செய்த
போர் விழிகள் உனதோ ...
மானிட்டரில் செய்து வைத்த
மாம்பழங்கள் கண்ணமோ...
இன்டர்நெட்டில் ஈமெயில் அனுப்பும்
இமை மூடா விழியோ .....
பேஸ்புக்கில் பேஸ்ட் செய்த
பேசாமடந்தை இதழோ ....
பேசினால் பிளாக் செய்யும்
ப்ரெண்ட் ரெக்கஸ்டும் இவளோ ...
பேக்கப் செய்யாத
மேக்கப்பும் இவளோ ...
லாக்- இன் செய்ய விரும்பாத
லாக்கப் இதயம் உனதோ ....
ரீ- பிரஷ் செய்ய விரும்பாத
ரெக்கார்டிங் இதயம் எனதோ .....
கௌ.....ஔ .....கௌ.....ஔ ..... ஓ....ஓ ..