லேன்ட் லைன்

இப்போதெல்லாம் லேண்ட்லைனில் ராங் கால்கள் வருவது கொஞ்சம் குறைந்திருக்கிறது.
ரொம்ப நாள் கழித்து அந்த இனிய அனுபவம் இன்றைக்கு. ஃபோனை எடுத்ததும் ஒருவர்,
“ஹலோ ராஜேந்திரனைக் கூப்பிடு” என்று ஏக வசனத்தில் அதட்டினார்.
கொஞ்சம் கேப் விட்டு, “அந்த செக்குத் தலையன் கிட்டே பேச மாட்டேன்னு சொல்றாருங்க” என்றேன்.
“யாரைப் பாத்து செக்குத் தலையன்னு சொல்றே? யாரு நீ?”
“நா சொல்லல்லைங்க. ராஜேந்திரந்தான் சொன்னாரு”
“ஹலோ.. நா சொக்கலிங்கம் பேசறேன். யாரு?”
“கரெக்ட். நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நீங்க சொக்கலிங்கம்தான்”
“நீங்க யாருன்னு கேட்டேன்”
“நான்.. நானு ராஜேந்திரனோட டிரைவர்”
“என்னா டிரைவர்?”
“என்னா டிரைவரா? கார் டிரைவர்ங்க. பின்னே ஸ்க்ரூ டிரைவரா ஃபோனை எடுத்துப் பேசும்?”
“ராஜேந்திரன் கார் வாங்கற அளவுக்கு ஆய்ட்டானா?”
“அவர் வாங்கல்லைங்க. கம்பெனில கொடுத்திருக்காங்க”
“கம்பெனியா? கக்கூஸ் ஆஸிட் பேக்கிங் பண்ணி விக்கிற கம்பெனில காரெல்லாம் தர்ராங்களா?”
“ஃபோன் மட்டும் தருவாங்களா?”
“இது ராஜேந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு இல்லையா?”
“ம்ம்ஹூம்.. ராஜேந்திரன் வீடே இதான். பக்கத்து வீட்டு நம்பர் சொல்றேன் எழுதிக்கறீங்களா?”
“எதுக்கு?”
“ஃபோன் பண்ணி ராஜேந்திரனைக் கூப்பிடச் சொல்லத்தான்”

எழுதியவர் : சேர்த்தவர் (18-Jul-15, 12:00 pm)
பார்வை : 522

சிறந்த நகைச்சுவைகள்

மேலே