திருச்செந்தூர்
களத்தில் மாயனை கூறு செய்து களைத்ததாலோ
கருநீல கடலே சூரனின் கூறான மாமயூரம் என்று கருதியோ
கார்வண்ணன் குமரி கைத்தலம் பற்றும் கனவில் நின்றனையோ
குன்றுதோரும் ஏறி ஏறியே கால்கள் கடுத்ததாலோ
குமரிக் கடலோர மீனவர் ஏசத் தமிழ் பாட்டு கேட்கவோ
கடலோரம் கோவில் கொண்டனையோ செந்தூர் கோவே !
கடலினும் கனன்றெழும் கதிர்வேள் மாய கங்குல் கூறு செய்வது
நித்தம் காலை நடப்பதால் கடலோரமெல்லாம் திருச்செந்தூர் களமே !