இதய வாசல்கள்

காலை வெளிச்சம் வந்த போது
வாசல் திறந்து கொண்டது
தென்றல் வருகை தந்த போது
பூ வாசல் திறந்து கொண்டது
எழுத்தில் நுழைந்திடும் போது
இதய வாசல்கள் திறந்து கொண்டது
வசந்த கீதம் ஒலித்தது
இளவேனில் பூக்களாக
கவிதைகள் மலர்ந்து சிரித்தன !
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jul-15, 10:40 pm)
Tanglish : ithaya vaasalgal
பார்வை : 165

சிறந்த கவிதைகள்

மேலே