நிலவே நினைவே

நிலவே நிலவே
என் நினைவே....
என் விழியில்
வந்த கனவே .....
வலியின் தவிப்பில்
துயிலும்
தொலைந்தது....
நினைக்க நினைக்க
மனசு
கனத்தது......
கண் முன்னே
கரைகிறது
காலங்கள்......
என் முன்னே
வரைகிறது
கவலையின்
ரேகைகள்......
கும்பிட்டுக்
கூப்பிட்ட
கடவுளும்
ஒரு ஓரமாய்
நின்று தான்
போனதோ...?
தனிமையின்
தவிப்பில்
வாழ்நாள் எல்லாம்
தொலைந்து
போக வாங்கி
வந்த வரமா
சாபமா புலம்புகிறேன்......
பிள்ளையின் முகம்
பார்த்து
தாயின் ஏக்கம்
கண்டு.....நான்
தூக்கம் காண்பேனா...?
குழந்தையின்
சிணுங்கலும்
சினங்களும்
என்னுள்ளே நின்று
என்னை வதைக்குதே.......