கவிதையும் நீயும்
கவிதையும் நீயும்
தேடுகிறேன்
உனக்காக
ஏற்கனவே எழுதி வைத்த
கவிதையொன்றை
கிடைக்கிறது
கவிதையைத் தவிர
அத்தனையும்
பொய்யுரைக்கின்றேன்
என்ன தேடுகிறீர்கள்
என்று கேட்கும்
அனைவருக்கும்
ரீங்காரமிடுகிறது
மூளைக்குள் ஏதொவொன்று
தேடு தேடு என்று
வலிக்கிறது
இதயம் இப்படி
தொலைத்துவிட்டாயே என்று
கிடைக்கவில்லை
கடைசி வரை
மீண்டும் மீண்டும் தேடியும்...
உன்னைப்போலவே