கல்யாண மேடை

கல்யாணம் காண வாங்க....இந்த
கல்யாணம் காண வாங்க.
ஊருக்கு தெற்கே ஒருகல் தூரம்
யாருக்கும் தெரியாத ஒருகால் மண்டபம்.
பந்தல் கிடையாது பாட்டும் கிடையாது
வந்தவர் நின்று கால் கடுக்கும்
கஞ்சன் வீட்டு கல்யாண மேடை
கொஞ்சம் வித்தியாசமே.
சோளத் தட்டையில் கால்கள்
வாழை மட்டையில் வாயில்கள்
சாப்பாடு...சாப்பாடு என்று...
கூப்பாடு போட்டால்.......
ஏற்பாடு இல்லையென
வேர்க்கடலை விருந்தளிக்கும்...
கல்யாணம் காண வாங்க....இந்த
கல்யாணம் காண வாங்க.