தவாஜி

ஏண்டா உன்ன தவான்னு கூப்புட்டாக் கொவிச்சுக்கிறே?

எம் பேரு தவசியப்பன். என்ன தவான்னு கூப்பிட்டா எனக்குக் கெட்ட கோவம்தாண்டா வரும். தவமணி, தவராஜ்ன்னு பேரு உள்ள்வங்களத் தவான்னு கூப்பிட்டா சரி தான்.



சரி. உன்ன எப்பிடி கூப்பிட்டா உனக்குப்பிடிக்கும்?

என்ன தவசி அல்லது தவாஜி-ன்னு கூப்பிடணும். சிவாஜி மாதிரி தவாஜி. இந்திலே 'ஜி'ன்னா பணிவையும் மரியாதையும் குறிக்கும் ஓசை. இந்திக்காரங்க ஒருத்தோரோட பேர் அல்லது பட்டத்தோட ஜியைச் சேத்துச் சொல்லறாங்க. நம்ம சிவபெருமான் இந்திக்காரங்களுக்கு சிவா. அதத் தான் அவுங்க மரியாதையுடன் சிவாஜின்னு சொல்லறாங்க. தமிழ்லே ஜி என்பது அவர்கள் என்று சொல்வதற்கு சமம். தெலுங்குக்காரங்க அவர்கள்னனு பொருள் தரும் வகையில் ஒருத்தரோட பேரச் சொல்லி அழைக்கும் போது 'காரு'ங்கற சொல்லச் சேத்துக்கறாங்க. உ-ம்: ரமா என்பவரை ஏமுண்டி ரமாகாரு (என்னங்க ரமா அவர்களே)ன்னு தான் சொல்லுவாங்க. தமிழர்களுக்குத் தான் அவர்களே அவர்கள் என்ற சொற்களைப் பேச்சுவழக்கில் பயன்படுத்தக் கூச்சம்.

எழுதியவர் : மலர் (20-Jul-15, 10:24 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 171

சிறந்த கட்டுரைகள்

மேலே