நாம்

நான் வியக்கும் மனிதன் நீ அல்லவா!
நாளெல்லாம் உன் பண்பின் நினைவல்லவா!
நான் பெற்ற வரம் நீ அல்லவா,
நாள்தோறும் பாடுவேன் உனை அல்லவா!

என் புன்னகை பொங்கும் உந்தன் வாசத்தில்,
என் மனம் தினம் துள்ளும் உந்தன் நேசத்தில்.
வாராயோ என்னுடன் என்றும் இணைந்தே,
வாழ்வோமே என்றும் அன்பு புரிந்தே!

எழுதியவர் : கவிதன் (21-Jul-15, 10:14 am)
சேர்த்தது : கவிதா
Tanglish : naam
பார்வை : 64

மேலே