சொத்து
ஆசுபத்திரியில் அவன்
ஆவி போகும் நேரம்
அருகில் மனைவி மக்கள்
அழகான நர்சும் ஆங்கே
அன்பு கோவிந்தா அப்பா நீ
ஆரெம்ஸி நகரில் அபார்ட்மென்ட்
இருவதும் இன்றே எடுத்துக் கொள்
ஆசை மகனே அருகே வா சுப்புடு
அடையாரில் பதினைந்து வீடு
அளித்தேன் உனக்கு ஆசைப்படி
அருமை கடைக் குட்டி நந்தலால்
அறிவில் சிறந்தவன் நீ ஆதலால்
ஆழ்வார்பேட்டை ஆபீஸ் ஐந்துமுனக்கு
அன்பே ஆருயிரே அனிதா ! என் இதர
எல்லா வீடுகளையும் நீயே எடுத்துக் கொள்
இருமினான் நோயாளி! செருமினாள் நர்ஸ் !
ஆச்சரியம் நர்சுக்கு ! அம்பானிக்கும் மேல்
அநியாய பணக்காரரா இவர் ?அடடா!
அறிந்திருந்தால் அமுக்கியிருக்கலாமே!
இவ்வளவு சொத்தா ! என்ன ஒரு பாக்கியம்!
எல்லாம் பூர்வ ஜன்ம புண்ணியம்!
என்னையும் கொஞ்சம் கவனியுங்கள் என்றாள்
எரிந்து விழுந்தாள் மனைவி ! எடு கட்டைய!
எல்லாம் இவன் பால் பாக்கட் போடற வீடு !
( Inspired by Pogo jokes 2013 )