படித்து பிடித்த நகைசுவை 02
"'எட்டுப்பட்டிக்கும் சொந்தக்காரன்'னு சொன்னத நம்பி பொண்ணக் கொடுத்தது தப்பாப் போச்சு"
"ஏன்.. என்னாச்சு?"
"அவன் கேரளாக்காரன். அங்கே 'பட்டி'ன்னா நாயாமே!!"
-------------
ஹோட்டல்ல சாப்பிட்டு முடிச்சிட்டுப் பார்க்கிறேன்... கையிலே காசில்ல.
ஐய்யோ! அப்புறம்?
அப்புறம் என்ன? பையிலிருந்து எடுத்துக் கொடுத்துட்டு வந்தேன்.
-----------------
யுவர் ஆனர்...
மிகவும் ஒல்லியான என் கட்சிக்காரர்மீது
குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ்
வழக்கு பதிவு செய்தது செல்லாது
என தீர்ப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
--------------
காட்டு வழியா 10 பேர் போய்ட்டு இருந்தாங்க. அந்த வழியா வந்த
சிங்கம் 6 பேரை கொன்னுட்டு 4 பேரை மட்டும் விட்டுட்டு. ஏன்?
ஏன்னா அவங்க 4பேரும் Lyons Club Member ஆச்சே.
-----------------
பெயிண்ட் ஏன் அழுகிறது
பெயிண்ட் ஐ நாம அடிக்கிறோம்ல அதான்
----------------
ஐப்பசியில எல்லாருக்கும் இலவசமா டிபன் கிடைக்கும் ஏன்?
ஐப்பசில தான் `அடை` மழை பெய்யுமே...