படித்து பிடித்த நகைசுவை
சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு : ?!?!?!?!?!?
**
எங்க அப்பா ரொம்ப ஏழை டா மச்சான்.
அப்படியா?
ஆமான்டா சமயத்துல அவரோட 2 காருக்கும் பெட்ரோல் போட கூட அவர்கிட்ட காசு இருக்காது தெரியுமா?
***
ஜானி, நேத்து ஸ்பென்சர் பிளாசால வசமா மாட்டிக்கிட்டேன்டா.
எப்படிடா?
கரண்ட் கட் ஆயிடுச்சி எஸ்கலேட்டர்ல மாட்டிக்கிட்டேன்.
***
ஆசிரியர் : உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு
நண்பன் : நீங்க தானே தூங்க வெச்சிங்க. நீங்களே எழுப்புங்க.
***
டேய் நம்ம கூட்டத்தில ரௌடியோட பையன சேர்த்தது தப்பா போச்சுடா!
ஏன்டா? என்னடா பண்ணான்?
ஒழுங்க தலைய சீவிட்டு வாடான்னா யார் தலையன்னு கேக்கறான்.
நன்றி ;தகவல் தளம்