10 -வது படிக்கும் போது
10 -வது படிக்கும் போது
எங்களுக்கு ஒரு புது தமிழ் Miss
வந்தாங்க.,
அவங்கள பொறுத்தவரைக்கும்
"திருக்குறள் தான் வேதம்
திருவள்ளுவர்தான் கடவுள்.
அவங்களுக்கு Ice வெச்சா
பரிட்சையில நிறைய மார்க்
வாங்கலாம்ன்னு என் Friend
ஐடியா சொன்னான்.
சரி Ice வெக்கிறது எப்படி..?
Answer Paper -ல பிள்ளையார் சுழி
போடறதுக்கு பதிலா..
" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு " -ன்னு
எழுதலாம்னு முடிவாச்சு.
அப்படியே எழுதினோம்.
என்ன ஆச்சரியம்..!
அதுவரைக்கும் 70 மார்க்
தாண்டாத நான்
80 மார்க் எடுத்திருந்தேன்.,
சுபம்...
Wait.., Wait..,
அகற முதல எலுத்தெள்ளாம் ஆதி
பகவான் முதற்றெ உலகு " -ன்னு
எழுதி வெச்சிருந்த என் Friend
என்ன ஆயிருப்பான்னு நினைக்கறீங்க...?
திருவள்ளுவரே அவனை மன்னிச்சாலும்.,
எங்க தமிழ் Miss மன்னிக்கிறதா இல்ல..
பின்னி எடுத்துட்டாங்கல்ல..
சிங்கத்து குகைக்குள்ளயே வந்து
சிறு நரி Film காட்டலாமா..?