யார் சாபம் இது
தெருவோரம் எங்கள் பிள்ளைகள் செத்துக்கிடக்கின்றார்கள்
தேடி வந்து பார்ப்பதற்கு சக்தியில்லை
எங்கள் இனம் அழிவது முறையா ?
நடக்கின்ற கொலைகளெல்லாம் சதியா?
பாராமுகம் பார்க்குதைய்யா நீதி
பார்க்கும் கண்களெல்லாம் பீதி
வந்தவரை வாயிராற்றும் பூமி
அந்த வயல்களெல்லாம் வெடிகுண்டுச்சகதி
கேட்பதற்கும் ,பார்ப்பதற்கும் நாதியில்லை
இது தமிழர்களின் தலைவிதியா
வெடிச்சத்தம் இல்லை என்று சொன்னாலும்
வேதனையால் தினம் தினம் மரண ஒப்பாரிகள் குறையவில்லை