என் தாத்தா

நேற்று...
தள்ளாடும் வயதிலும்
தன் தலை நுகரச் செய்து
தார் சாலை கடந்த
என் கண் கண்ட
கடவுள்..
இன்று...
திண்டாடும் நிலை வந்து
தினந்தினம் காற்றோடு
தன் கண்ணீர் துளிகளை
வரம்பு கடக்கா வாசலோடு
மட்டும் நின்று என் நலம்
விசாரிக்க அனுப்பி மரம்
கொண்டு செய்த கதவெனும்
மறைவில்..
கால் கடுக்க
காத்திருப்பார்
"என் தாத்தா"..
முதியோர் இல்ல
முகவரிப் பலகையின்
முன்னே...
செ.மணி