குழந்தையுடன் ,,,,,

என் மகனுடன் நான்
பயணிக்கும்போது,,,,
அவன் உலகத்திற்கு
நான் மண்டியிட்டு கொள்கிறேன் .
அவன் என் தோல் உயரும்
கனவுகளை ஏற்படுத்திக்கொள்வான்
அவன் இறங்கும் வரையில்
சுமையின் சூடு கூட தெரிவதில்லை ,
விட்டில்பூச்சிகளையும் , புளுக்களையும்,
தொடுவான் நான் மெல்ல முகம் சுழிப்பேன்
கன்று வால் தொட பின் அது துள்ளும்
மிருக வதை சட்டம் தெரியாத பருவம்
அவனுக்கு ,
என் மீசையெய் முறுக்கி என்னில்
கோழை செய்வான் என் மகன் ,
சேறில் வைத்த காலை அவன்
என் மார்பில் வைத்து மெல்ல
கட்டி அணைத்து அப்பா என்பான் ,
என் மூக்கை கில்லி நகம்
கடிக்க நினைவு படுத்துவான் ,
சிறுநீர் கழித்த ஒற்றை கால்
ஈரத்துடன் வீடு நுழைவான் அவன் ,
மகனின் செல்ல குறும்பு
விருப்பி அப்பாக்களில் நானும் ஒருவன் ...
அம்மாவிடமிருந்து உணவு
அழைப்பு வரும் வரை என் மகன்
என்னிடம் தான்
உலகம் கற்றுக்கொள்வான்....

எழுதியவர் : (21-Jul-15, 9:35 pm)
பார்வை : 56

மேலே