கருத்தில் கனிந்தவை

காதலுக்கு ‍‍‍‍‍....

தமிழ் பொய் என்றல் அது கவிதை
தமிழ் மெய் என்றால் அது நம் அன்பு !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தாய்க்கு....

தவழும் நிலவு மழலைக்கு
தள்ளாடும் போதை தந்தைக்கு
தாங்கிடும் தாய் கண்ணீருக்கு !
********************************************************************************************************************
சன் ஃப்ளவர்....

தேடிய கவிதையும்
நீயும் கிடைக்கவில்லை
பாடியே வருகிறான் பார்
பகலவன்
TOWARDS SUNFLOWER !
########################################################################
சுடர் விழி....

முகில் மறைத்தது விண் சுடர்களை --உன்
முகத்திலோ மொத்தமாய் இரு சுடர்விழி தீபமாய் அவை....

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


பாவையின் பதம்.....

பாதம் பதித்து நடந்து வர கொலுசொலி
பார்வை அவளது மின்னொளி
அதிர்ந்து நின்ற அரங்கில் கரவொலி !

########################################################################

எட்டாக் கனி....

காலம் என்பது கசப்பும் இனிப்பும் தரும் கனிமரம்
ஏற்கும் மனத் துணிவு வந்துவிட்டால்
அந்த அனுபவம் எல்லாம் கவிதைகளே !

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பெண்....

பூவும் மலரும் அவள்
புன்னகையும் பூங்கவிதையும் அவள்
உலகம் பெண் மலர்த் தோட்டம்
அவள் இன்றேல் பாலைவனம் !

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எத்தனை நகைகளடி....

காதினில் பல்லி நகை
கழுத்தினில் வைர நகை
இதழினில் முத்து நகை
முத்து நகையே முகத்தைக் காட்டு !

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மரம் நடு....

சூரியனுக்கு கதிர்கள் அழகு
சுடர் முருகனுக்கு வேல் அழகு
பூபதிக்கு பூவுலகு அழகு
பூவுலகிற்கு இயற்கை அழகு
இயற்கைக்கு மரம் நடுதல் அழகு !

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

...கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jul-15, 9:27 am)
பார்வை : 164

மேலே