உணர்வுகளின் மொழி
ஏன் எழுதுகிறேன்
எதற்காக எழுதுகிறேன்
என்று யோசிக்கையில் ....
உணர்வுகள் ஊமையாகிப்
போயிருந்தால்
மனிதனுக்கு கவிதை மொழியே
கிடைத்திருக்கிறதோ !
உணர்வுகளின் துடிப்பின் ஓசைதான்
கவிதையின் சலனமோ !
வார்த்தைகளின் வடிவத்தில்
உயிர் பெற்று பிறப்பெடுக்குதோ !
அந்தியின் அழகினில் ஆனந்த ராகம் பாடுது
தென்றலின் தழுவலில் மெல்லிசை இசைக்குது
கண்ணீர் பெருக்கினில் வாழ்க்கையை பேசுது
மானுடம் எனும் வீணையை மீண்டும் மீண்டும் மீட்டுது !
காலப் பெருவெளியில் ஞானம் கூறுது
யாருக்கும் காத்திராமல் தன வழி நடக்குது !
கவிதையே நீ உணர்வுகளின் மொழி !
~~~கல்பனா பாரதி~~~