மதியின் பயணம்
இசை எனும் திசையில்
விதியின் மதியாக பிறந்தேன் .....
வானம் எனும் வாழ்க்கைகடலில்
பயணம் செய்கிறேன் ......
நதியில் செல்லும் ஓர்
சருகாக வாழ்கிறேன்......
நதி செல்லும் திசையில்
என் இதயம் பாய்கிறது......
காதல் எனும் இசைத்தூரலில்
அனுதினமும் நனைந்து
காலன் வரும் வரை
என் காலத்தின் திசையில்
என் கண்இமைமூடும் நொடிவரை
இடைவிடாது என் கார்முகில்கண்ணனுக்கு சேவைசெய்வேன் ....

