நிராகரிப்பு

நிராகரிப்பு !

இது வேதனைகளின் சங்கமம்
போதனைகளுக்கு இடமில்லை

பணம் கொண்ட திமிர்
உறம் ஏறிய உள்ளங்கள்

மனங்களை மறந்து போன
குணம் கெட்ட மனிதர்கள்

வலி எடுப்பவனுக்குதான்
வலியின் வலிமை தெரியும்

ஏற்படுத்தியவனுக்கு தெரியுமா ?
எக்காளமிட்டு தான் சிரிப்பான்

நிராகரிப்பினால் நீ கொடுத்த வலி
உனக்கு நடக்கும் வரை ..............
அதை உன்னால் உணர முடியாது !

கவிஞர். இறைநேசன்

எழுதியவர் : கவிஞர்.இறைநேசன் (23-Jul-15, 2:07 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
Tanglish : niragarippu
பார்வை : 520

மேலே