ஒரு நேர்க்கோட்டில்
சிறு தூறல்தான் ..
போய்விடலாம் ..
என்று நடையை
எட்டிப் போட்டதும் ..
வலுத்த மழையில் ..
நனையாமல் ..
நனைந்தபடி
நடந்ததில்..
மழைக்கும் மகிழ்ச்சி போல..
பெய்தபடியே ..
எனக்குத் துணையாக
என் வீடு வரை
வந்தது..
நின்றது..
வீட்டுக்குள் நான்
நுழைந்த பின்..
நட்பாய் மழையும் கூட..
ஒரு நேர்க்கோட்டில்..!