குடி ஒழிந்து குடி உயர

" குடி ஒழிந்து குடி உயர "
************************************

கள் அமுது எண்ணமுற கன்னமது
பின்னமுற பெண்ணமுதின் சோகமதுவே
உள்ள மது குடலேற உள்ளமது
தடுமாற வெள்ளமது இல்லமதிலே
இல்லமதன் தெள்ளமுது கனியமுதை
கொள்ளுமது பந்தமது அறுக்குமஅதுவே
இல்லமது சிறப்புறவும் இருக்கும் மது
ஒழிந்திடவும் ஆணையிடு என்தெய்வமே

எழுதியவர் : சக்கரைவாசன் (23-Jul-15, 7:41 pm)
பார்வை : 119

மேலே