நிவேனிதா - காதல் தொடர் - பாகம் 1- உதயா

அவன் ஒரு வித்தியாசமானவன். அவன் வாழ்வினை கற்றும், ரசித்தும்,உணர்ந்தும் வாழ்ந்துக் கொண்டிருந்தான்.அவன் பெயர் கலையரசன். இவன் மற்றவரின் புரிதலுக்கு அப்பாற்பட்டவன் என்றும் சொல்லலாம். வெளியே சொல்லமுடியா வலியும் வேதனையும் மனதில் இருந்தாலும் பூக்களைப் போல நிலவினைப் போல அழகாய் புன்னகையோடு காட்சி அளிப்பவன்.

நண்பர்களுக்கு நல்லதை எடுத்துரைத்தும், அன்பினில் ஆழியாய் . கோபத்தில் ஆதவனாய் வாழ்வினை வாழ்ந்துக் கொண்டிருந்தான்.அனைவரும் பொழுதுபோக்கிற்காக முகனூலினை பயன்படுத்துவதை போல அவனும் ஒருநாள் முகனூலில் சேர்ந்தான். பெண்களிடம் பேசும் போது அக்கா, தங்கை என உறவுமுறையினையும் ஆண்களிடம் பேசும் போது அண்ணன், தம்பி எனும் உறவுமுறையினையும் பயன்படுத்தி சகஜமாக பேசிக்கொண்டிருந்தான்.

அன்று ஒருநாள் தன்னுடம் பேசுபவர்கள் யாரும் முகனூலில் இல்லாததால் புதியதாக நண்பர்களை சேர்க்க நண்பர்களை தேடிக்கொண்டிருந்தான். அவன் தேடலில் அவனை மிகவும் கவர்ந்த பெயர் நிவேனிதா. அப்பெயருடைய நபருக்கு நண்பர் விண்ணப்பத்தையும் அளித்துவிட்டான். இரண்டு தினங்கள் கழித்தும் அப்பெயருடைய நபரும் அவனது நண்பர் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டனர்.

அன்றுதான் புத்தாண்டு கலையரசன் அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டே வரும் போது நிவேநிதாவுக்கு வாழ்த்துகளை பரிமாறினான். நிவேநிதாவும் நன்றி எனது சொல்லிவிட்டு வாழ்த்துகளை பரிமாற கலையரசன் ஏதோ ஒரு நினைவில் "நன்றி நண்பா" என பதிலும் அனுப்பிவிட்டான்

நிவேனிதா மறுபடியும் " என்ன நண்பாவா ..?" என்று கேட்க அவர்களின் நட்பு தொடர ஆரம்பித்தது.
அவள் எப்போதுமே கலையரசனிடம் பேசும் போது " வாங்க போங்க" என்ற மரியாதையான வார்த்தைகளையே பயன்படுத்திக் கொண்டிருந்தாள். ஆனால் கலையரசனோ நான் எப்போதும் நண்பர்களிடம் மாரியாதையை எதிர்பார்ப்பதே இல்லை என்று கூறி " நீ , வா , போ" , என்றும் "அண்ணா" என்றும் சொல்லு என்றான்.

"என்ன அண்ணாவா?"
நாம் நண்பர்களாகவே இருப்போம் என்றாள். அதோட அவள் கலை என்றும் அவன் நிவி என்றும் பெயர்களை சுருக்கி பேச தொடங்கினர். ஒரு நாள் குறுந்தகவல் பரிமாறலில் அவள் "டா" என்று அனுப்பிவிட்டு மீண்டும் சிறிது நேரத்திலே "மன்னிச்சிடு தெரியாம டைப் பண்ணிட்டேன் " என்றாள். ஆனால் அதை அவன் தவறாக நினைக்கவே இல்லை. இருப்பினும் கலையரசனின் மனதினில் இதுவரை உணராத உணர்வு ஒன்று பிறந்தது.

இருவரும் வழக்கம் போல கல்லூரிக்கு சென்றுவிட்டு இரவு நேரங்களில் மட்டும் அவர்களின் குறுந்தகவல் பரிமாற்றம் தொடங்கும். நிவேனிதா கலையரசனிடம் " கலை உனக்கு கேர்ள் பிரிஎண்ட்ஸ் (girl friends ) யாரும் இல்லையா? உன்னோட பெஸ்ட் ப்ரிஎண்ட் யாரு? " என்று கேட்க அவன் தனது கல்லூரி தோழி பிரியாவை பற்றி பெருமையாக சொன்னான். ஆனால் அவளுக்கோ பொறாமையும் கோபமும் வந்தது

"ஏன் இவன் தன்னை பெஸ்ட்னு சொல்லவில்லை" என்று.

மறுநாள் கலையரசன் தனது பெரியப்பா மகனுக்கு பெண் பார்க்க தனது தாய் தந்தையுடன் சென்று விட்டான். அன்று இரவு அவன் முகனூலுக்கு வரவே இல்லை . வழக்கம் போல முகனூலுக்கு வந்த நிவேனிதா கலையரசன் இல்லாததால் அவள் கோபம் அடைந்தும் அழுதுகொண்டும் இருந்தாள்.

அவன் பெண் பார்க்கும் விஷேசங்களை முடித்துவிட்டு இரண்டு நாட்கள் கழித்து முகனூல் வந்தான். நிவேனிதா அவனிடம் சரியாக பேசாமல் சண்டைப் போட்டாள்.

" நான் உனக்கு முக்கியம் இல்லையா? நேத்து ஏன் எப்பி(fb) க்கு வரல " என்று கேட்டாள்.

அவன் நடந்த விபரங்களை அவளிடம் சொன்னான். ஆனால் அவள் சமாதானம் அடைவதாக தெரியவில்லை. கலையரசனின் கல்லூரி தோழி முகனூலில் அழைத்ததால் அவன் அவளுடன் பேச சென்றுவிட்டான் .

ஆனால் நிவேனிதா அழுதுகொண்டு இருந்தாள். அவள் ஏன் அழுகிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. நாட்கள் கரைய கரைய அவளின் கோபமும் கரைந்தது . கலையரசன் அவளிடம்

" நிவி நீ யாரனா லவ் பண்ணுறியா" என்றுக் கேட்டான். அவள் "இல்லை கலை நீ யாரனா லவ் பண்ணுறியா என்ன?" என்று கேட்டாள்.

கலையரசனும் " இல்லை நிவி" என்று சொன்னான். "கலை நீ ஏன் பா லவ் பண்ணுல" என்று அவள் கேக்க ." இல்ல மா என்ன லவ் பண்ணுறது அவ்ளோ ஈசி இல்ல, என்ன லவ் பண்ணா எனக்காக ஐந்து வருஷம் காத்திருக்கணும். எனக்கு அண்ணன் தங்கசி லா இருக்காங்க நான் அவங்கள கரையேத்துரவரைக்கும் வெயிட் பண்ணனும், அதா நான் எந்த பெண்ணையும் லவ் பண்ணல " என்று கலையரசன் நிவியிடம் சொன்னான்.

நிவேனிதா கலையரசனிடம் " கலை உனக்கு உன் வீட்டுல யார ரொம்ப பிடிக்கும் " என்று கேட்டாள்.

"எனக்கு என் தங்கச்சியதா ரொம்ப பிடிக்கும் உனக்கு ஒன்னு தெரியுமா எனக்கு தலை வலிலா வந்தா நான் என்னோட தங்கச்சி மடியிளதா படுத்துப இப்போகூட கொஞ்சம் நேரம் என் தங்கச்சி மடியிளதா படுத்துனு இருந்த " என்று கலையரசன் சொன்னான்.

"ச்சே என்ன அண்ணன் டா நீ எனக்கு பொறாமையா இருக்கு" என்று நிவேனிதா சொன்னாள்.

"ஏன் டி அப்படி சொல்லுற" என்று கலை கேட்டான்.

" இல்ல டா உன்ன மாதிரி பாசம் வெக்கிறவங்க எனக்கு யாரும் இல்ல டா " என்று நிவி சொன்னாள்.

அவர்கள் இருவம் பேசிக்கொண்டே இருக்கும் போதே " நிவி எனக்கு ரொம்ப பயமா இருக்கு " என்று கலை சொன்னான் .

"ஏன் டா என்ன ஆச்சி" என்று நிவி கேட்டாள்

"இல்ல எனக்கு டுடே எக்ஸாம் ரிசல்ட் வந்துடிச்சி. பட் எனக்கு பேஜ் ஓபன் ஆகல நைட் டுவெல் க்கு மேல தா ஓபன் ஆகும் டி அதா பயமா இருக்கு " என்று கலை சொன்னான்.

"பயப்படாத பயப்படாத டா "என்று அவள் சமாதானம் படுத்திக்கொண்டே இருந்தாள்

"சரி நிவி டைம் பாரு 11.30 ஆயிடுச்சி நீ போடி தூங்கு நான் பாத்துகிறேன்" என்று கலை சொன்னான்

"சரி டா நான் போற பயப்படாத ரிசல்ட் நல்ல படியா வரும்" என்று சொல்லி விட்டு அவள் உறங்க சென்று விட்டாள்.

தொடரும் ......

எழுதியவர் : உதயா (24-Jul-15, 12:03 pm)
பார்வை : 1109

மேலே