ரகசியம்

மனம் முழுவதும்
குதூகலம்....
ரெக்கைகள் முளைத்து
எங்கோ பறப்பது போல்
உள்ளுக்குள்ளே ஒரு உணர்வு...
என் காது மடல்களை
செல்லமாக தீண்டும்போது
சுகத்தின் உச்சத்தில்
என் நெஞ்சம்...
வெளியே சொன்னால்
பைத்தியம் என்று சிரிப்பார்கள்....ஆனால்
உங்களுக்கு மட்டும் சொல்கிறேன்
நான் எனக்கு பிடித்த
தொங்கட்டானை அணித்திருக்கிறேன்...
யாருக்கும் சொல்லாதீர்கள்
ரகசியம்....

எழுதியவர் : இந்திராணி (24-Jul-15, 2:52 pm)
Tanglish : ragasiyam
பார்வை : 73

மேலே