என்ன செய்வது

கால் வலி வந்தாலும் கடவுளைத்தான் வேண்டுவோம்
அது யானை கால் என தெரிந்தாலும்

முன் நடப்பது பொய் என தெரிந்தாலும் புரட்டுத்தனம் என புரிந்தாலும்
கைகட்டி வாய்பொத்தி கேட்போம்

வேற்று கிரகமனிதன் இங்கு வந்தாலும் வேடிக்கையை பார்ப்போம்
வீட்டின் முன் சூடம் கொளுத்தி விட்டோடு சேர்ப்போம்

செவ்வாய்க்கு கோள் அனுப்பினாலும் நல்ல நேரம் பார்ப்போம்
உதிரி பாகம் 100 என்றாலும் உடன் எலுமிச்சை சேர்ப்போம்

என்ன செய்வது ......

எழுதியவர் : த.மா.சரத்குமார் (24-Jul-15, 4:05 pm)
Tanglish : yenna seivathu
பார்வை : 108

மேலே